வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-27

காயமடைந்த படை வீரரை ஏற்றிவந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் மீது பாதுகாப்புப் பிர தேசத்திலிருந்து புலிகள் நடத்திய ஏவு கணைத் தாக்குதல் யுத்த தர்மத்தை மீறிய செயல் மாத்திரமன்றி, எந்த மக்களின் பாதுகாவலர்களாகத் தங்களை இனங் காட்டினார்களோ அந்த மக்களுக்கு உயி ராபத்தை ஏற்படுத்தும் முயற்சியுமாகும்.
யுத்தம் நடைபெறும் போது எதிரி தரப்பு விமானத்தின் மீது தாக்குதல் நடத்து வது சர்வ சாதாரணமானது என்று அவர் கள் ஒருவேளை கூறலாம். காயமடைந்த வீரர்களை ஏற்றிவரும் விமானத்தின் மீது தாக்குதல் நடத்துவது சர்வ சாதாரணமா னதல்ல.

அவ்வாறான தாக்குதலை மேற் கொள்ளக் கூடாது என்று ஐக்கிய நாடு கள் சபையின் பிரகடனத்தில் சொல்லப்ப ட்டுள்ளது. இலங்கைத் தமிழர் விவகார த்தை ஐக்கிய நாடுகள் சபையில் விவாதி க்க வேண்டுமென வலியுறுத்தும் புலிகள் தாக்குதல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை மதிக்காமல் நடக்கின்றார்கள்.

இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான மோதலில் சிக்கிச் சிவிலியன்கள் பாதிப் புக்கு உள்ளாகக் கூடாது என்பதற்காக அரசாங்கம் பாதுகாப்புப் பிரதேசமொ ன்றைப் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. இப்பிரதேசத்துக்குள் வருமாறு அரசாங் கம் மக்களுக்கு அழைப்பு விடுத்தது. இப்பிரதேசத்துக்குள் அரச படைகள் தாக்குதல் நடத்துவதில்லை.

ஆனால் சிவி லியன்களுடன் சேர்ந்து பாதுகாப்புப் பிர தேசத்துக்குள் நுழைந்த புலிகள் அங்கி ருந்து அரச படையினர் மீது தாக்குதல் தொடுக்கின்றார்கள். இரண்டு ஹெலி கொப்டர்கள் மீதான ஏவுகணைத் தாக்கு தலும் பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்து புலி கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் அரச படையினரை இலக்கு வைப்பதாக மேலோ ட்டமான பார்வைக்குத் தெரிகின்ற போதி லும், உண்மையில் அவை அரசாங்கத் தின் அழைப்பை ஏற்றுப் பாதுகாப்புப் பிரதேசத்துக்கு வந்த மக்களையே இலக்கு வைக்கின்றன.

அரசாங்கம் பாதுகாப்புப் பிரதேசத்தை நோக்கிப் பதில்த் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு டனேயே புலிகள் அங்கிருந்து தாக்குதல் தொடுக்கின்றார்கள். படையினர் பதில்த் தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில் சிவிலி யன்கள் மோசமாகப் பாதிக்கப்படுவார் கள் என்பது புலிகளுக்குத் தெரியாதத ல்ல.

அதையே அவர்கள் விரும்புகின்றா ர்கள். சிவிலியன்களுக்குப் பாதிப்பு ஏற்ப ட்டால் சர்வதேச மட்டத்தில் அதைப் பிர சாரமாக்கி யுத்தநிறுத்தக் கோரிக்கையை நியாயப்படுத்தலாம் என்பது புலிகளின் நோக்கம்.

புலிகள் இப்போது தங்களின் இருப்புக் காகவே யுத்தம் புரிகின்றார்கள். தனிநாடு அமைப்பதற்கான யுத்தம் என்பதெல்லாம் பழைய கதை ஆகிவிட்டது. இப்போது அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள் வதற்காகவே போரிடுகின்றார்கள். தங்க ளின் இருப்புக்காக அப்பாவிப் பொதுமக் களைப் பலிக்கடாக்களாக்குவதை எவ் விதத்திலும் அவர்களால் நியாயப்படுத்த முடியாது.

தோல்வியைத் தவிர்க்க முடியாத கட்ட த்துக்கு வந்து விட்டார்கள் என்பது புலிக ளுக்கும் தெரியும். ஏதேனுமொரு விதத் தில் யுத்தநிறுத்தத்துக்கு வழிசெய்து தங்க ளைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கி ன்றார்கள். அது வரையில் மனிதக் கேட யங்களாகப் பொதுமக்களைத் தடுத்து வைத்திருக்கின்றார்கள். மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதாக இல்லை.

யுத்தநிறுத்தம் இடம்பெறுவதற்கான அறி குறிகள் சிறிதளவேனும் இல்லை. இந்த நிலையில் புலிகள் சரணடைவதன் மூலம் தங்களையும் காப்பாற்றலாம்; தங்களால் தடுத்து வைக்கப்பட்டுப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களையும் காப்பாற்ற லாம்.

Thinakaran
வன்னியில் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலம் புலிகளின் சகல செயற்பாடுகளையும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் பாதுகாப்புப் படையினர் முடக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் புலிகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தையே கைப்பற்ற வேண்டியுள்ளதாகவும் ஏனைய 20 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு பொது மக்களுக்காக அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பில் நடைபெற்றது.

கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தற்பொழுது பாதுகாப்புப் படையினர் வெற்றியடைந் துள்ளனர்.

படையினரின் கடுமையான தாக்குதல்களினால் தோல்வியின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள புலிகள் தற்பொழுது ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

படையினரின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் நாளுக்கு நாள் பின்னடைவுகளைக் கண்ட புலிகள் செய்வதறியாது பொதுமக்களுக்காக அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்திற்குள் ஊடுருவியுள்ளனர்.

தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் தங்களது கனரக ஆயுதங்களை வைத்து பொதுமக்களுக்கு மத்தியிலிருந்து பாதுகாப்பு படையினரை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

போர் முனையில் காயமடைந்த படைவீரர்களை அழைத்து வரச் சென்ற விமானப் படையின் பெல்-212 ரக ஹெலிகொப்டர்களை இலக்குவைத்து பாதுகாப்பு வலயத்திலிருந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டமை இதற்கு சிறந்த சான்றாகும்.

புலிகளின் செயற்பாடுகள் இப்பொழுது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. புலிகளின் கடுமையான தாக்குதல்களை வெற்றிகரமாக

எதிர்கொண்டு எமது படைவீரர்கள் முன்னேறி வருகின்றனர். புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள சின்னஞ்சிறிய பிரதேசம் எந்தத் தறுவாயிலும் படையினரிடம் வீழ்ந்து விடும் நிலையிலுள்ளது.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களின் நலனில் அக்கரையுள்ள சர்வதேச நிறுவனங்கள் இன்று ஆற்ற வேண்டிய முக்கியமான பணி என்னவென்றால், புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதநேய மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு அரசுடன் இணைந்து ஆதரவு வழங்குவதாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¥லுகல்லெ, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, கடற்படை பதில் பேச்சாளர் கமாண்டர் மஹேஜ் கருணாரட்ன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

அலைகள்
ஓயாது விளையாடும்
அழகான தீவு!

குண்டுகள் விழுந்து
நொடிக்கொருமுறை
பூமி அதிர்கிறது.

திரும்பிய திசையெல்லாம்
பிணங்கள்!

பரம திருப்தியுடன்
பறக்க முடியாமல்
கழுகுகள்
புதிய பிணங்களுக்காய்
ஆவலாய்
காத்துக்கொண்டிருக்கின்றன.

****

வானம் வெறித்துப்
பார்க்கிற கண்கள்
தீயில் வெந்த உடல்கள்
பிளாட்பாரத்தில் - வரிசையாய்
கிடத்தப்பட்டிருக்கின்றன

பிணங்களை காட்டி காட்டி
சிலர்
ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள்

அருகில் போய்
உற்றுக்கேட்டேன்
"ஓட்டு"

***


More than a Blog Aggregator

by ஆர். முத்துக்குமார்
இழுபறி ஆட்டங்கள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. கொடுங்கல் வாங்கல் தொடங்க இருக்கின்றன. தமிழ்நாட்டில் இப்போதைக்கு நான்கு முனை போட்டி. திமுக, அதிமுக, தேமுதிக மற்றும் பாஜக.

கடந்த தேர்தலில் அணி அமைத்திருந்த வைகோ சட்டமன்றத் தேர்தலின்போது நடந்தே போயஸ் தோட்டத்துக்குச் சென்றுவிட்டார். பிறகு இடதுசாரிகள் ரெடி.. 1..2..3.. ஜூட் என்று தோட்டத்துக்குப் போய்விட்டார்கள். எஞ்சியிருந்தது பாமக, ஆறாம் விரலாக. உதிர்ந்துவிட்டது. நிற்க.

தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் திமுகவுக்கு அதிக சிக்கல் இருக்காது. தேமுதிக வரும்.. வரும்.. என்று சொல்லிக்கொண்டே பேரத்தைத் தொடங்கியது காங்கிரஸ். ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே, பதினான்கு தொகுதிகள் காங்கிரஸுக்குத் தரப்படும். எஞ்சியிருக்கும் 25ல் திமுகவுக்கு 21, திருமாவளவன், காதர் முகைதீன், ஜவாஹிருல்லாஹ், ஜெகத்ரட்சகன் ஆகியோரு தலா ஒன்று என பிரிக்கப்படும். புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு. திருமா மிகவும் அடம்பிடித்தால் ஜெகத்துக்குத் தரப்பட்ட ஒன்று திரும்பப்பெறப்பட்டு புதுவை தரப்படக்கூடும். (பாமக ஙண் திருமா)

அதிமுக கூட்டணியில் இனிமேல்தான் ஆட்டம் இருக்கிறது. திடீர் விருந்தாளியான பாமகவைத்தான் அதிமுக வெகுவாகக் கவனிக்கும். இது நீண்ட நெடுங்காலமாகக் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மதிமுகவுக்கு எரிச்சலைக் கொடுக்கும். தொகுதிப் பங்கீட்டில் பாமகவுக்கு ஏழு தொகுதிகள் + அன்புமணிக்கு ஒரு ராஜ்யசபா சீட் (ஒருவருடம் கழித்து). ஆனால் 1998 தேர்தலில் பாமகவுக்குச் சமமாக தொகுதிகளைப் பெற்ற மதிமுகவுக்கு தற்போது ஐந்து தொகுதிகள் தரப்படலாம். இது மதிமுகவை நெருக்கடியில் தள்ளும்.

அதற்குப் பதிலாக ஐந்தையும் வெற்றித் தொகுதிகளாகக் கொடுங்கள் என்று மதிமுக கேட்டால் அதற்கு அதிமுக தலைமை சம்மதிக்குமா என்பது சந்தேகம்தான். கொடுக்கும் தொகுதிகளைக் கனத்த இதயத்துடனேயே மதிமுக வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும். இது அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலவீனம். ஒருவேளை காலியாக இருக்கும் தமிழக சட்டமன்றத் தொகுதிகளைக் காட்டி, இடைத்தேர்தலில் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றுகூறி மதிமுகவை சமாதானப்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன. இடது சாரிகள் தலா இரண்டு ஒதுக்கப்படும். தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கூடுதலாக ஒரு தொகுதி தரப்படலாம்.

வெற்றிவாய்ப்புகள்? அது திமுக கையிலோ அதிமுக கையிலோ இல்லை. மூன்றாவது நபராகப் போட்டியிடும் தேமுதிகவின் கைகளில் இருக்கிறது. திமுகவுக்கு அல்லது அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய வெற்றிகளை தலைகீழாகப் புரட்டிப்போடும் வேலையைத்தான் விஜயகாந்த் செய்யப்போகிறார் என்று தோன்றுகிறது. அதுதான் அவருடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.

கூட்டணி அமைந்துள்ள விதத்தை வைத்துப் பார்த்தால் திமுக அணியும் அதிமுக அணியும் சம்பலம் கொண்டவை அல்ல. அதிமுக அணி வலுவாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அவர்களுக்கு இருக்கும் ஒரே மைனஸ். விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவது. இதுதான் திமுக அணிக்கு இருக்கும் ஒரே ப்ளஸ். ஆகக்கூடி, தேர்தல் முடிவுகள் இப்படி அமையலாம்.

அதிமுக அணியில் அதிமுகவுக்கு 16, மதிமுகவுக்கு 2, பாமகவுக்கு 4. இ.கம்யூவுக்கு 1, மார்க்சிஸ்டுக்கு 1. திமுக அணியில் திமுகவுக்கு 9, காங்கிரஸுக்கு 5, விடுதலை சிறுத்தைகளுக்கு 1, முஸ்லிம் லீக்குக்கு 1. தப்பித்தவறி கன்யாகுமரி மாற்று அணிக்குப் போகலாம்.
நாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாம் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதியாகிய என்னையும், பாதுகாப்பு செயலாளரையும், இராணுவத் தளபதியையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக கொண்டு செல்வதற்குத் தேவையான தகவல்களைச் சிலர் திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளைகளினதும் சங்கங்களினதும் பிரதிநிதிகள் சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகளின் பணத்திற்கும், அவர்களின் கவனிப்புக்கும் மதிமயங்கிய சிலரே இவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர். எமது நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சாராரும், வெளிநாட்டில் வாழுகின்ற வேறு சக்திகளும் தமக்குக் கிடைக்கின்ற பொருளாதார, அரசியல் இலாபங்களையும், பணத்தையும் மட்டுமே மனதில் கொண்டு இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

சிலர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் இருந்து கொண்டு இவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர். நாட்டுக்கு கெடுதல் செய்யும் இவ்வாறான சூழ்ச்சிக்காரர்கள் நாம் முன்னெடுக்கின்ற வேலைத் திட்டங்களை தோல்வி அடையச் செய்வதற்கு எமக்கு எதிராக சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

நாம் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கை இன்னொரு இனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கையாக அமையாது. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது என்பது இந்த நாட்டில் வாழுகின்ற சகல இனமக்களுக்கும் விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்கும் காரியமாகவே கருதுகிறேன்.

இந்த நிலைமையை சர்வதேச சமூகத்திற்கு நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த நாட்டை அழித்தாவது, புலிகளுக்கு நாட்டைத் தாரை வார்த்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் ஒரு சாரார் செயற்படுகின்றனர். அவர்கள் புலிகளுடன் சேர்ந்து செயற்படுகின்றனர். இலங்கை தொடர்பான தவறான அபிப்பிராயங்களை பல்வேறு வழிகளிலும் இவர்கள் உலகிற்கு வழங்கி வருகின்றனர். இவற்றைத் தோற்கடிப்பதற்காக நாம் செயற்படுகின்றோம்.

எமக்கு எதிராக அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த அழுத்தங்களின் நோக்கம் நாம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதே. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எந்தவிதமான உள்ளூர், வெளியூர் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நாம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம். அவற்றை ஒரு போதும் இடைநிறுத்த மாட்டோம்.

நாம் பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிப்போம். அதற்காக எம்மை ஏற்கனவே அர்ப்பணித்து விட்டோம். இந்நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் சகலரையும் ஒரே மக்களாக பார்க்கிறோம் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம். பி, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, மேல் மாகாண சபைக்கான ஐ. ம. சு. மு. கொழும்பு மாவட்ட அபேட்சகர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
என் வீட்டுக்கு அருகில் புதிதாக ஒரு குடும்பம் குடிவந்தது. முதல் இரண்டு நாட்கள் புன்னகையிலே கழிந்தது. பின்பு என் மனைவியின் மூலம் அவர்களின் வீட்டு நிலவரம் அறிந்துகொண்டேன்.அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு பெண், இரண்டு ஆண். பெண்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. பையன்களுக்கும் திருமண வயதுதான். அவர்கள் வீட்டில் எப்போதும் அந்த வீட்டு அம்மாவின் குரல்தான் கேட்கும். மற்றவர்கள் வீட்டில் இருக்கிறார்களா என்றே தெரியாத அளவிற்கு இருந்தது. அவர்கள் குடிவந்து சில மாதங்களில் கோடை காலம் வந்தது. கோடை வந்தாலே மின்தடையும் வரும் என்பது உத்திரவாதமான விசயமாயிற்றே. நாங்கள் இருக்கும் வீடு மிகவும் நெருக்கமாக இருக்கும். அதனால், மின்விசிறி எப்போதும் ஓடிக்கொண்டேதான் இருக்கும். மினதடை ஏற்பட்டால் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுவோம்.(நகரத்து வாழ்க்கை அவ்வளவுதான்) அப்படித்தான் அன்றும் நடந்தது. மின்தடை ஏற்பட அனைத்து குடும்பங்களும் வராண்டாவில் கூடிற்று. நானும் பக்கத்து வீட்டுக்காரரும் மாடிக்கு சென்றோம். மெல்ல என்னிடம் பேச்சு கொடுத்தார்.
பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு அவரிடம் கேட்டேன், "வீட்ல நீங்க இருக்கிறதே தெரியமாட்டேங்குதே, வெளியவே வரமாட்டேங்கிறீங்க..." என்றேன்.

"வெளியே வரவே சங்கடமா இருக்கு எனக்கு. தினந்தோறும் பார்திருப்பீங்களே. என் பொண்டாட்டி பேசுறதை. நான் வாயைவே திறக்க மாட்டேன். நானும் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்திட்டேன். பிள்ளைகளுக்கு முன்னே என்னை எதுவும் சொல்லாதேன்னு. ஆனா அவ எதுவும் கேட்கிறதில்லை. அவளே என்னை மதிக்காதபோது, என் பிள்ளைகள் எங்க மதிக்கும். அதனால மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. அதனாலதான் வெளியே வர்றதில்லை" என்றார்.
எனக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது.
"மெதுவா அவங்களுக்கு புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லுங்க. நிச்சயம் புரிஞ்சுப்பாங்க." என்று ஆறுதல் சொன்னேன். அதற்குள் மின்சாரம் வர, அவங்க வீட்டம்மா கூப்பி்ட சென்றுவிட்டார்.
எனக்கு அவரை நினைத்தால் பாவமாக இருந்தது. நான் என் மனைவியிடம் நடந்ததை சொன்னேன்.
என் மனைவி,"பாவமாத்தான் இருக்கு.அப்படியெல்லாம் நான் நடந்துக்க மாட்டேன், பயப்படாதீ்ங்க"என்றாள்.

ம்! நம்பிக்கைதானே வாழ்க்கை!

இந்த சம்பவத்தில் ஏதேனும் நீதி தெரியுதா?
பின்னூட்டுங்க!

இந்த வலை(கடை)க்கு புதிதாக வருபவர்கள் மட்டும் இங்கே 'க்ளிக்'கவும்.

கருத்துகள் இல்லை: