செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30

கல்லாறு சதீஷுக்கு டாக்டர் பட்டம்

[Monday March 30 2009 07:54:24 PM GMT] [விசாலி]


சுவிஷ் தமிழ் எழுத்தாளர் கல்லாறு சதீஷுக்கு சர்வதேச திறந்த பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது.


புலம் பெயர் தமிழ் படைப்பாளியான கல்லாறு சதீஷ், தனது தரம் மிக்க படைப்புகளின் மூலம் புகழ் பெற்றவர்.

கல்லாறு சதீஷின் படைப்புகள் எடுத்துக்கொண்ட புதிய கருக்களினால், உலகத் தமிழ் மக்கள் மத்தியில் மதிப்புப் பெற்றார்.

பனிப் பாறைகளும் சுடுகின்றன, சொர்கங்களும் தண்டிக்கின்றன,தமிழர் புலம்பெயரியலை தத்துரூபமாகப் பதிவு செய்துள்ளன.



கல்லாறு சதீஷுக்கு தமிழகத்தில் இலக்கிய விருது வழங்கப் பட்டது.

சுவிஷ் கலாசார அமைச்சகத்தினூடக இரண்டு முறை பணப் பரிசு பெற்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்,இவர் எழுத்துக்களைப் பாராட்டி தங்க மோதிரம் பரிசளித்துக் கெளரவித்தார்.

கல்லாறு சதீஷின் எழுத்துக்கள் சுவிஷ் வாசகர்கள் மத்தியிலும் சென்றது.

இதனால் இவரின் பல கதைகள் மொழி பெயர்க்கப்பட்டன.



சுவிஷில் தமிழர்களின் 20வது ஆண்டில் கல்லாறு சதீஷின் எழுத்துக்கள் தமிழர் சாதனை என பேர்ன் நகரில், சுவிஷ் மக்களால் விழா எடுத்துப் பாராட்டப்பட்டது.

சுவிஷ் எழுத்தாளர் சம்மேளனம் கல்லாறு சதீஷை தங்களது அங்கத்தவராக அங்கீகரித்தது.

சுவிஷ் பல்கலைக் கழகம் கல்லாறு சதீஷின் எழுத்துக்களைப் பாடமாக ஏற்றுக்கொண்டுள்ளது, இப் பாடத்திட்டத்தில் கல்லாறு சதீஷின் வாழ்க்கைக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது.

சுவிஷ் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள தமிழ்த் திருமணம் எனும் திரைப்படத்தின் பாடலாசிரியராகவும், தமிழ் நிபுணராகவும் கல்லாறு சதீஷ் பணியாற்றியுள்ளார். இத் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

கல்லாறு சதீஷ், எழுத்தாளராக, மேடைப்பேச்சாளராக, பேட்டியாளராக, சமூக சேவகராக மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.

கல்லாறு சதீஷ் இலாப மையம் என்னும் மக்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

மிகத் தகுதி மிக்க கல்லாறு சதீஷுக்கு மார்சல் ஆர்ட்டிற்கான சர்வதேச பல்கலைக் பல்கலைக் கழகமும்,

கொம்பிலிமென்ரார் மெடிசனுக்கான சர்வதேச திறந்த பல்கலைக் கழகமும்
கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது.

டாக்டர் பட்டம் குறித்துக் கல்லாறு சதீஷைக் கேட்டபோது" டாக்டர் பட்டம் மகிழ்சியைக் கொடுத்தாலும்,தினம் தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில், இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்குரியதாகவில்லை, இருப்பினும் துயரப்படும் மக்களின் விடியலுக்காக டாக்டர் பட்டம் பயன் படும் என்று கருதுகிறேன்" என்றார்.
-நன்றி லங்காசிறி சுவிஸ் செய்திகள் .
இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர பகுதி களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்துவதற்கு கடத்தல் ஆட்கள் முயன்று வருவதாக காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர பகுதி களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்துவதற்கு கடத்தல் ஆட்கள் முயன்று வருவதாக காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் இடைத்தங்கல் முகாமில் ஞாயிற்றுக்கிழமை வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த முகாமில் 467 குடும்பங்கள் உள்ளன. மொத்தத்தில் 1,550 பேர் வசிக்கின்றனர். முகாமில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் இடைத்தங்கல் முகாமில் ஞாயிற்றுக்கிழமை வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த முகாமில் 467 குடும்பங்கள் உள்ளன. மொத்தத்தில் 1,550 பேர் வசிக்கின்றனர். முகாமில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும்.
30.03.2009. இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர்  சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார். நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும் என்பது குறித்து முக்கியமாக அந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் நாயர் அவர்கள் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார். அதேவேளை, போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான [...]

கருத்துகள் இல்லை: