புதன், 25 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-24

24.03.2009. இலங்கையில் ஊடகத்துறை மீதான வன்முறைகள் கடந்த வருடம் மோசமடைந்திருந்ததாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் கிரமமாகக் கொல்லப்படுவதும் அரசாங்கங்கள் குற்றச் செயல்களுக்குத் தீர்வு காண தவறுவதுமான நாடுகளின் பட்டியலை பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தயாரித்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நீதியானது மோசமடைந்திருக்கும் நாடுகளை பார்க்கையில் நாம் கவலையடைந்துள்ளோம். பத்திரிகையாளரின் கொலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணத்தவறிவிடுவதானது பத்திரிகைகளுக்கு எதிரான வன்முறையை மேலும் தீவிரமாக்கும் என்பதை எமது ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன என்று பத்திரிகையாளரை பாதுகாக்கும் குழுவின் நிறைவேற்றுப் [...]



இன்று அமைச்சர்கள் அன்புமணி, வேலு ராஜினாமா செய்தார்கள் என்று நியூஸ் வந்தது பிறகு அப்படி செய்யவில்லை என்று மறுப்பு. இன்று சோனியா தமிழ்நாட்டில் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் ஆனால் கலைஞர் கூட்டணி பட்டியலில் பா.ம.க பற்றி எதுவும் சொல்லவில்லை. அதற்குள் திருமா பா.ம.க திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்கிறார். தங்கபாலு எங்கள் அணியில் தான் பா.ம.க இருக்கிறது என்கிறார்.

எனக்கு எதுவும் புரியவில்லை, ஆனால் மேலே உள்ள படத்தை பார்த்தால் எனக்கு ஒன்று புரிகிறது உங்களுக்கு ?

புரிந்தவர்கள் கமெண்டில் சொல்லலாம். பரிசு நிச்சயம் உண்டு ;-)
உலகின் மிக மலிவு விலை கார் என்று சொல்லப்படும் டாடாவின் நானோ, மக்களின் கைக்கு வரும் போது ஒரு லட்சம் ரூபாய்க்கு கிடைக்காது என்பது தெளிவாகிறது. ஏனென்றால், நானோவின் ஸ்டாண்டர்டு மாடல் காரின் எக்ஸ் - பேக்டரி விலையே ரூ.ஒரு லட்சம் என்று சொல்லப்படுகிறது. பின்னர் அது ஷோரூமுக்கு வரும்போது, ரூ.1,12,000 வரை விலையாகும் என்கிறார்கள். வாங்குபவர்கள் கைக்கு வரும்போது, ரோடு டாக்ஸ், இன்சூரன்ஸ் எல்லாம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் சேர்த்தால் ரூ.1,20,000 க்கு மேல் விலை வந்து விடும் என்கிறார்கள். இது நானோவின் பேசிக் மாடல் தான். இது தவிர இரண்டு டீலக்ஸ் மாடல்கள் இருக்கின்றன. பேசிக் மாடலே ரூ.1,20,000 க்கு மேல் விலைக்கு வந்து விடும் போது டீலக்ஸ் மாடல்களின் விலை ரூ.1,60,000 மற்றும் ரூ.2,00,000 வரை கூட வந்து விடும் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


More than a Blog Aggregator

by ♥ தூயா ♥ Thooya ♥


இப்போ என்னோட சமையல் வரலாறை [வல்லாரைன்னு எழுதிட்டேன்] எடுத்து கொண்டால் இன மொழி சாதி மத வேறுபாடு அற்று செய்முறைகள் அமைந்திருக்கும். அதில் குறிப்பாக கடலுணவை எடுத்து கொண்டால், எந்த நாட்டு செய்முறை என்றாலும் சமைப்பதுண்டு. பார்க்க நன்றாக இருந்து, சுவையும் நல்லாயிருக்கும் என காதுவழி கதைகள் வந்தால் சமைப்பதுண்டு. ஆனால் மீனை/நண்டை/இறாலை வெட்டுவதோ, சுத்தம் பண்ணுவதோ என் வேலையில்லை. அதுக்கு ஒரு காரணம் இருக்கு......ஒரு சின்ன ப்ளாஸ்பக்

டொய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

"சித்தப்பா நண்டு dead ஆ?"
" அது செத்து 4 நாள் ஆச்சு தூயா"
"உண்மையாவோ? நான் தொட்டு பார்க்கட்டா?"
"ஓ அதுக்கென்ன"
"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ" பின்ன உயிரோட இருக்கிற நண்டு தொடும் போது பூவா பறிச்சிட்டு இருக்கும்?

அன்று தொடக்கம் இன்று வரை எனக்கும் நண்டுக்கும் ஒத்துவராது...நாங்க எதிரும் புதிரும்..அது தான் எதிரின்னு ஆகிடிச்சில்ல, அதனால நண்டோட நான் கோபம்.

ஆக வீட்டில் வெட்டி, சுத்தம் செய்த நண்டை தான் நான் அகப்பையாலே சமைப்பதுண்டு. பின்ன, தொட்டால் ஒட்டிக்கும்ல. கோவம்னா கோவம் தான். அதனாலோ என்னமோ நண்டில் இருக்கும் அத்தனை செய்முறைகளையும் சோதித்து, நண்டையும், உண்பவர்களையும் சோதிப்பதுண்டு.

இனி உங்களுக்கான சோதனை:

தேவையானவை:
நண்டு 1
முருங்கை இலை 1 பேணி
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 3
மிளகாய் தூள் 2 மே.க
மஞ்சள் தூள் 1/2 தே.க
பெரும்சீரகம் 2 தே.க
மல்லி தூள் 1/2 மே.க
தேங்காய் பால் 1/2 பேணி
கறுவா துண்டு 1
அரைத்த உள்ளி 4

செய்முறை:
1. நண்டை வெட்டி, சுத்தம் செய்து எடுங்கள். [கோவம்னா, வீட்டில யாராயாச்சும் வெட்ட சொல்லுங்க]
2. ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வெங்காயம், மிளகாய், உள்ளியை பச்சை வாசம் போகும் வரை வதக்குங்கள்.
3. இன்னொரு சட்டியில் சீரகம்,கறுவா வாசம் வரும் வரை வறுத்தெடுங்கள்.
4. மேற்கூறிய இரண்டையும் நண்டோடும், முருங்கை இலையையும் ஒன்று சேர்த்து சிறிதளவு நீரில் அவியுங்கள். நீர் கொதிக்க ஆரம்பித்ததும் தூள்களையும், உப்பையும் மறக்காமல் சேருங்கள்.
5. நண்டு அவிந்ததும் [சிவப்பாகும்], தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க வைத்து இறக்குங்கள்.

குறிப்பு:
1. கறிவேப்பி சேர்க்கலாம்.
2. படத்தில் முருங்கை இலையை தேடாதிங்க. [நான் போடலையாக்கும்]
3. தேங்காய் பாலை தவிர்த்து பசும்பால்/ சோய் பால் சேர்க்கலாம்.
4. உறைப்பு அதிகம் வேணும் என்றால் மிளகாய்தூளை அதிகமாக்குங்க.
5. நண்டு விரும்பிகளுக்கு:

The average blue crab contains about 2 ounces (57g) of meat, depending on its size. On average, meat yield is 14% of whole crab weight.

Crab meat is an excellent source of high quality protein, vitamins, and minerals that are needed for good nutrition. Crab meat is an excellent source of phosphorus, zinc, copper, calcium, and iron and is very low in fat, especially saturated fat. For a complete nutritional analysis, click here.

Crab meat is also somewhat high in cholesterol which can also raise your blood cholesterol level. Most major health organizations, such as the American Heart Association, recommend a daily limit of 300mg. It is important to note that saturated fatty acids are the chief culprit in raising blood cholesterol levels and that crab meat is very low in fat, and especially low in saturated fat. Consult your doctor or dietitian if you are on a very restricted diet.

http://www.bluecrab.info/nutrition.htm
உலகில் அதிகமாக பாம்பு கடித்து இறந்து போவோர் எந்த பகுதியில் வாழ்பவர்கள் என சிந்தித்து இருக்கிறீர்களா? தென் அமெரிக்க அமசோன் காடுகளாக இருக்கக் கூடும் என சிலர் கருதலாம். அமசோன் உலகில் தொன்மையான காடுகளில் ஒன்றாகும். ஆயிரக் கணக்கான விஷ ஜந்துக்கள் அக்காடுகளில் உள்ளன. இருப்பினும் அமெசோன் என்பது சரியான பதிலாகாது.
தென் ஆசிய பகுதியை சேர்ந்த மக்களே அதிகமாக பாம்புக் கடிக்குட்படுகிறார்கள். இ்து தொடர்பாக 68 நாடுகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் ஆசியாவில் மட்டும் 421000 பேர் ஆண்டுதோறும் சராசரியாக பாம்பு கடிக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது. அதில் சராசரியாக 20000 பேர் இறந்துப் போகிறார்கள் என்பது மேலும் அச்சத்தைக் கொடுக்கும் செய்தியாக இருக்கிறது.
மக்கள் தொகை மிகுந்து காணப்படும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 80000 பேர் பாம்புக் கடிக்கு ஆளாவதாக தகவல் பதிவு செய்யப்படுகிறது. அதில் 11000 பேர் இறந்துப் போகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.
அடுத்த படியாக இருக்கும் நாடு இலங்கையாகும். இலங்கை மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 33000 பேர் பாம்புக் கடிகளுக்குட்படுகிறார்கள். அதில் வியகத்தக்க செய்தி என்னவென்றால் பாம்புக் கடித்து இறப்பவர்களில் ஆண்களே அதிகம் இருக்கிறார்கள். பெண்களைக் காட்டினும் ஆண்களே வேலைகளில் அதிகம் ஈடுபடுவது இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
சிலருக்கு என்ன பாம்பு கடித்தது என்று கூட சரியாக தெரியாமல் போய்விடுகிறது. இதனால் பாம்புக் கடி சிகிச்சைக்கு தக்க மேம்பாடுகளை சரிவர செய்ய இயலாமலும் போகிறது. அதே வேலையில் சிகிச்சை அளிப்பதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றனவாம்.
உலகில் ஏறக் குறைய 3000 வகையான பாம்புகள் இருக்கின்றன. அவற்றில் 600 வகை பாம்புகள் நச்சுத் தன்மைக் கொண்டவையாகும். அண்டார்டிகா பகுதிகளில் பாம்புகள் வசிப்பதில்லை. அப்பகுதியின் சீதோசன நிலை பாம்புகள் வாழ உகந்ததாக இல்லாததே அதற்குக் காரணமாகும். அண்டார்டிகா பகுதிகளில் அதீத குளிர் இருக்கும். பாம்புகளும் குளிர் இரத்தம் கொண்ட உயிரனமாகும். இதனால் பாம்புகள் அப்பகுதிகளில் இருப்பதில்லை.

பாம்புகள் பல்லி இனத்தைச் சேர்ந்தவை என்றும் பின்னாட்களில் மாற்றங்களில் கால்கள் இல்லாமல் பாம்பாக மாறி இருக்கக் கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாம்புகளில் மிகப் பெரிதென கருதப்படுவது பச்சை நிற அணக்கொண்டாவாகும். இது 8.8மீட்டர் நீளமும், 30 செண்டி மீட்டர் அகலமும் கொண்டது. இவை 227 கிலோ வரையினும் எடைக் கொண்டவையாக இருக்கும். இவ்வகைப் பாம்புகள் அமசோன் மற்றும் ஓரினகோ நதிக் கரைகளில் காணப்படுகின்றன.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பர்போடோஸ் தீவினில் உலகிலேயே சிறிய வகை பாம்பினை அடையாலம் கண்டார்கள். அவை மண்புழுவை விடவும் அளவில் சிறியவையாகும். அதிகபட்சமாக 10 செண்டிமீட்டர் வரையினும் வளரும் தன்மைக் கொண்டவை. சிறு பூச்சிகளை உண்டு வாழும் இப்பாம்பினம் நச்சுத் தன்மை இல்லாதவை எனக் கூறப்படுகிறது.
பாம்புகளில் ஆண் பெண் வித்தியாசங்களைக் கண்டறிவது சிரமமாகும். சூடு அதிகரிக்கும் வேலைகளில் பாம்புகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். சில பாம்புகளின் நச்சில் மருந்துகள் செய்கிறார்கள். பலருக்கும் பாம்புகளைப் பிடிக்காது. அவற்றை மனிதனின் உயிருக்கு ஆபத்தை தரும் உயிரினமாகவே காண்கிறார்கள். இருப்பினும் அவற்றை செல்லப் பிராணியாக வளர்க்கும் மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: